Saturday, January 24, 2015

தொட்டால் தொடரும் - ஐ ஷங்கரை முந்திய கேபிள் சங்கர்



திரையுலகில் ரெண்டே மேட்டர்தான்  . . . முதல் படம் செய்பவர் ஒன்று  நல்ல படம் பண்ணனும் இல்ல  . . . படம் நல்லா  பணம் பண்ணனும் . .  

இது இரண்டும் இல்லாமல் வழக்கம் போல் நிறைய பேர் செய்வது போல் நானும் ஒரு படம் பண்ணிட்டேன் என்ற தொனியிலேயே உள்ளது இந்த படம் .
____________

மௌன குரு மற்றும் மதுபானக்கடை படங்களை அவர் விமர்சனம் பார்த்து . . . பார்த்த பேபி ஆல்பட் திரை அரங்கில் . . . அவர் படத்தை பார்த்தது ஒரு இனிய அனுபவம் . . . ஆனால் . . . அந்த படங்களில் இருந்த தன்மை இவர் படத்தில் கொஞ்சம் கூட இல்லாதது வருத்தமே .

______________


கதையை தேர்ந்தெடுத்தத்திலேயே தவறு செய்துவிட்டார் . . . அதில் தொட்ட தவறான விசயம் . . . படம் முழுக்க தொடர்கிறது  

_______________
போன் பேசும் காதலர்கள் . . . மொக்கை ஜோக் நண்பன் . . சீரியல் போல் நாயகி குடும்ப பிரச்னைகள்  . . . விரட்டும் வில்லன் என டெம்ப்‌ளேட் காட்சிகள் 

__________

பின்னணி இசை செம மொக்கை . . . ஒளிப்பதிவு மட்டுமே ஆறுதல் 

___________

இந்த படம் நல்லாருக்குன்னு இயக்குனர் கேபிள் சங்கர் வேண்டுமானால் சொல்லலாம் . . . திரை விமர்சகர் கேபிள் சங்கர் சொல்ல வாய்ப்பே இல்லை 
_____

சில நிறுவனங்களில் சம்பளத்துடன் கூடிய பயிற்சி தருவார்கள்  . . . அது போலவே இந்த  முயற்சியை செய்துள்ளார்  கேபிள் சங்கர் . . . அவர் பெற்ற இந்த பயிற்சி அவருடைய அடுத்த படத்திற்கு உதவட்டும்

____________
ஷங்கரின் ஐ படம் 3 மணி நேரம் நெளிய வைத்தது . . . இந்த படம் 2 மணி நேரம் . . . அந்த வகையில் பார்க்கும் போது ஷங்கரை சங்கர் வென்றுவிட்டார் என்றே சொல்ல வேண்டும்