நீயா நானா நிகழ்ச்சி , விஜய் டிவி ஆகியவை நமக்கு பிடிக்காத ஒன்று . . .
ஆனாலும் . . . ட்ரைலர் . . . ஏற்படுத்திய தாக்கத்தில் உள்ளே நுழைந்த நமக்கு கிடைத்தது ஒரு பரவச அனுபவம் .
தெளிவான கதையை வைத்து கொண்டு குழப்பமாய் படமெடுக்கும் நமது அதி மேதாவி இயக்குனர்கள் நிறைந்த நம்ம ஊரில
குழப்பம் நிறைந்த ஒரு கதையை தெளிவாக சொல்லி அசத்துகிறார் இயக்குனர் . .
அவருக்கு பக்கபலமாக சக டெக்னீசியன்கள் . .
இனப்படுகொலையை ஒரு கவுன் காட்சி மூலம் ஆவணப்படுத்தியதில் கவனம் ஈர்க்கிறார் படத்தொகுப்பாளர் .
பாடல்களும் பின்னணி இசையும் அருமை .
இந்தி படத்தையும் . . . வாட்ஸ் அப் வசனங்களையும் திருடி எடுக்கப்பட்ட
பசங்க 2 போன்ற விளம்பர வியாபார படங்களை புறக்கணித்து . . .
உண்மையான சிறுவர்களின் உலகத்தை பல்வேறு திருப்பங்களுடன் காட்சிபடுத்தும் இந்த படத்தை
வெற்றி அடைய செய்ய வேண்டியது ரசிகர்களின் கடமை