Sunday, May 21, 2017

செட்டில்மென்ட் "

சத்யராஜ் , ஆர்யா ,நயன்தாரா ஜெய் , நஸ்ரியா தோன்றிய ராஜா ராணி படம் வெற்றி அடைந்தது எல்லோருக்கும் தெரிந்த கதை .
அப்படம் வெளிவந்த போது ஒரு கிசு கிசு கிளம்பியது .
இது வேறு ஒருவர் முழுமையாக உருவாக்கிய திரைக்கதை என்று .
உருவாக்கிய நபர் ராதாரவியின் உறவினர் என்றும்
அவர் கமல்ஹாசனிடம் உதவி இயக்குனராக இருந்தவர் என்றும்
தகவல் வெளியானது .


பார்த்திபன் இயக்கத்தில் வெளியான கதை திரைக்கதை படத்தில் கூட இந்த தகவல்
மறைமுகமாக இடம் பெற்றது .

நிற்க

தற்போது சங்கிலி புங்கிலி கதவை திற என்ற படம் வெளியாகி உள்ளது .
இதை ராஜா ராணி இயக்குனர் அட்லீ தயாரித்துள்ளார் .
இந்த படத்தின் இசை வெளியீட்டில் கமல் & ராதாரவி பங்கேற்றனர் .
ஐக் என்பவர் இயக்கி உள்ளார் .

ஐக் என்ற நபர் இந்த பேய்கதையை நம்பாமல் . . .
உண்மையில் இந்த பிராஜெக்ட் உருவானதையே " செட்டில்மென்ட் "
என்ற பெயரில் ஒரு திரைப்படமாக உருவாக்கியிருந்தால் ஜெயித்திருப்பார் என்கிறார்
ஒரு வெவரம் தெரிந்த சினிமா ஆர்வலர்